கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் (SVPISTM) முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீண்டும் ஒன்றிணைந்த நினைவுகள் மற்றும் சாதனைகளைக் கொண்டாடினர்.
இதில் கல்லூரி இயக்குனர் டாக்டர். பி.அல்லி ராணி நிறுவனத்தின் சாதனை கள் மற்றும் அதன் பாரம்பரியத்தை வடிவமைப்பதில் அதன் முன்னாள் மாணவர்களின் முக்கிய பங்கை எடுத்து ரைத்தார்
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் ஹாப்பி மைண்ட்ஸ்டர் இன்டர்நேஷனல் நிறுவனரும், உளவியலாளருமான டாக் டர். எம்.கே.சிவா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறையில் வெற்றிகரமான வல்லுநர்கள் குழுவில் உரையாற்றிய டாக்டர். சிவா மன அறுவை சிகிச்சையின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இதில் பருத்திக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் முன்னாள் மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன.



