fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய திட்டத் தில் ஊராட்சி செயலாளர் களை இணைக்க வலியு றுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தி னர் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் ரா.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் என்.பொன்னுவேல், மாநில இணைச் செயலாளர் எம்.பச்சமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எஸ்.துரைசாமி வரவேற் றார். ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட போதும் தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. ஓய்வூதிய தொகையாக இன்று வரை ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகி றது. காலமுறை ஊதிய விகிதத்தில் கடந்த 2018ம் ஆண்டு கொண்டுவரப் பட்ட போதும் கடந்த 7 ஆண்டுகளாக ஓய் வூதிய திட்டத்தில் இணைக்கப் படவில்லை. ஊராட்சி செயலாளர்களை ஊதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

முன்னதாக கோரிக் கையை வலியுறுத்தி நாமக் கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்ததால் ஊராட்சிப்பணிகள் பாதிக்கப்பட்டன. மாநில செயற்குழு உறுப் பினர் பி.சக்திவேல், பொதுக் குழு உறுப்பினர் எம்.பாலசுப்ர மணியன், மாவட்ட மக ளிரணி செயலாளர் பி.சங் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி இரண்டாவது கட்டமாக மாநில அள விலான சென்னை, சைதாப் பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை தலைமை யகம் முன்பு மாநில அள விலான பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்துவது என்றும் தெரி வித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img