fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரி மாணவி விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக தேர்வு

கேபிஆர் கல்லூரி மாணவி விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக தேர்வு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த கல்வியாண்டு உயிர்மருத்துவப் பொறியியல் படித்து முடித்த மாணவி ரூத் இந்திய கடற்படையின் நிர்வாக பிரிவில் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த பிரிவில் நான்கு பெண் அதிகாரிகளில் மாணவி ரூத் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

தொழில்நுட்ப பிரிவிற்கான நேர்முக மற் றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி, இந்த மாத இறுதியில் கேரளாவின் எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை அகாடமியில் நடைபெறும் பயிற்சியில் சேரவுள்ளார்.

இந்நிலையில், மாணவிக்கு கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்த கிருஷ்ணன், கல்லூரி முதல் வர் முனைவர் சரவணன், மற்றும் பேராசிரியர் பிளையிங் ஆபிஸர் (Flying officer) சூரியஉமாதேவி (விமானப்படை என்சிசி அதிகாரி) ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் கூறும்போது: இந்த மாணவி கே பி ஆர் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை யின் விமானப்படை பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று ‘சி’ சான்றிதழ் பெற்றவர் ஆவர். இது, இவர் இந்திய கடற்படை ராணுவ தேர்வில் வெற்றி பெற பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img