ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.இ.சி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு ஆகியவை ஒருங்கிணைந்து உற்பத்தி திறன் மேம்பாடு குறித்த கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தரராஜன் தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாகவும் மற்றும் பேச்சாளராகவும் பெங்க ளூரு, போஸ்ச் குளோபல் சாஃப்ட் வேர் டெக்னாலஜிஸ் திட்ட இயக்குனர் பிரகாஷ் தல்லாபிரகடா, மேக்ஸ் பைட் டெக்னாலஜிஸ் இயக்குனர் சபரி நாதன் மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சேர்ந்த காயத்ரி கலந்து கொண்டு தங்களுடைய கருத் துக்களை முன் வைத்தனர்.
விழாவில், சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம் பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு இன்குபேஷன் சென்டர் நிறுவுவது பற்றியும் தமிழ்நாடு அரசிடம் தொழில் தொடங்க நிதி பெறுவது பற்றியும் ஆராய்ச்சி படைப்புகளுக்கு சிறந்த யோசனைகளை கலந்துரையாடல் மூலம் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில், எஸ்ஆர்இசி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் தலைமை இயக்க அதிகாரி பேராசிரியை ஷர்மிளா, இன்குபே ஷன் மேலாளர் திருக்குறள் கனி, தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்வேறு துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.



