Homeபிற செய்திகள்தேனியில் 100 அடி கொடிக்கம்பத்தில் 9 அடி உயர தவெக கொடி ஏற்றப்பட்டது

தேனியில் 100 அடி கொடிக்கம்பத்தில் 9 அடி உயர தவெக கொடி ஏற்றப்பட்டது

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 22 ஆம் தேதி அறிமுகம் செய்து கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்தார்

சிவப்பு மஞ்சள் என இரு வண்ணங்களிலும் போர் யானைகள் மற்றும் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடியினை தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது

அதன் பேரில் தேனி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் லெப்ட் பாண்டி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நூறு அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப் பட்டு 9 அடி உயர கட்சிக்கொடி ஏற்றப் பட்டு பிரம்மாண்டமாக காட்சியளித்தது.

முன்னதாக தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து வாகனத்தில் ஊர்வலமாக வருகை தந்து கொடியேற்றி இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img