fbpx
Homeபிற செய்திகள்ஏசிஐ புதிய தலைவர் தேர்வு

ஏசிஐ புதிய தலைவர் தேர்வு

இந்திய ஆங்கிலிகன் திருச்சபை (ஏசிஐ) மற்றும் கிறிஸ்மேடிக் சர்ச்சஸ் ஆப் இந்தியாவின் பேராய செயற்குழுக் கூட்டம் கோட்டயத்தில் நடந்தது.

ஏசிஐ மெட்ரோபா லிடன் டாக்டர் ஸ்டீபன் வட்டப்பாரா, டெபுடி மெட்ரோபாலிடன் டாக் டர் ரெயின்ஹார்டு சந்திர சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பொதுச் செயலாளர் பிஷப் டாக்டர் ஆர்.பி. ஜெயகுமார், பிஷப் டாக்டர் பெக்சஸ் ஜேக்கப், மக்கள் தொடர்பு அதிகாரி ஜோசப் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

கூட்டத்தில், ஏசிஐ மற்றும் கிறிஸ்மேடிக் சர்ச்சஸ் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாகக்குழுத் தலைவராக மதுரை பிஷப் டேவிட் சரவணன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர், உலகளாவிய குருத் துவ மற்றும் சுவிஷேச சபைகளின் ஐக்கியத்தின் பேராயராகவும் செயல் படுவார். கோவை சிசிஐ பேராய தலைமையகத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக் கொள்வார்.

தொடர்ந்து இந்த பேராய நியமன ஆராதனையும் நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img