fbpx
Homeபிற செய்திகள்‘ஐசிஐசிஐ புரு புரடெக்ட் அண்ட் கெயின்’ அறிமுகம்

‘ஐசிஐசிஐ புரு புரடெக்ட் அண்ட் கெயின்’ அறிமுகம்

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ஒரு முழுமையான ஆயுள் காப்பீடு, விபத்து காரணமாக மரணம் மற்றும் நிரந்தர ஊனத்திற்கு எதிரான காப்பு மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்கும், நிதி இலக்குகளை அடைவதற்கும் சந்தை சார்ந்த வருமானம் ஆகியவற்றை வழங்குகிற ஒரு தனித்துவமான திட்டமான ஐசிஐசிஐ புரு புரடெக்ட் அண்ட் கெயின் (Pru Protect N Gain) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஈக்விட்டி மற்றும் கடன் முழுவதும் பரவியுள்ள 18 நிதி விருப்பங்களை வழங்குவதன் மூலம் வருவாயை அதிகரிக்க உதவுகிறது. பாலிசி காலத்தின் போது குடும்பத்திற்கு முழுமையான நிதிப் பாதுகாப்பு இருப்பதையும், உயிர்வாழ்வதற்கான ஒரு கணிசமான மொத்தத் தொகையையும் உறுதி செய்வதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதி இலக்குகளை அடைவதற்கான சரியான பாதுகாப்பு மற்றும் நீண்ட கால சேமிப்பின் சரியான கலவையை வழங்குகிறது.

கூடுதலாக, 45 வயதிற்குட்பட்ட வாடிக்கையாளர்கள் உடல் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு விபத்து காரணமாக பாலிசிதாரரின் மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், குடும்பம் நிதி ரீதியாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்த ஆயுள் காப்பு அல்லது இழப்பீட்டுத் தொகை பயனாளிக்கு/நியமிக்கப்பட்டவருக்கு ஒரு மொத்த தொகையாக வழங்கப்படும்.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் இன் தலைமை விநியோக அதிகாரி அமித் பால்டா கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர பிரீமியத்தின் 100 மடங்கு வரை ஆயுள் காப்பீடு வழங்கும் தனித்துவமான திட்டமான ICICI Pru Protect N Gain ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என் றார்.

படிக்க வேண்டும்

spot_img