Homeபிற செய்திகள்நீலகிரியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஆய்வு

நீலகிரியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழி குழுவின் தலைவர் வேல்முருகன் மற்றும் குழுவின் உறுப்பி னர்களான இரா.அருள், ஏ.நல்லதம்பி, எம்.கே. மோகன், எஸ் ஜெயக்குமார் ஆகியோர் குன்னூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங் கப்படும் உணவு வகை களின் தரத்தினை உட்கொண்டு ஆய்வு மேற் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உணவு அருந்தும் அறை, படுக்கை அறை, கழி வறை ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்கள்.
தொடர்ந்து விடுதி காப்பாளர் சசிகுமார் மிகச் சிறப்பாக விடுதியை பராம ரித்து வருவதால் அவரை பாராட்டி பொன்னாடை அணிவித்து ஊக்க பரிசாக 2000 வழங்கினார்.

மேலும் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த மாணவர் விடுதியை பொதுப்பணித்துறை மூலம் சிறப்பு பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கேட்டறிந்து, அரசிடம் உத்தரவு பெறப் பட்டதுடன் உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதேபோல் மாவட்ட ஆட்சித்தலைவர் விருப்ப உரிமை நிதியிலிருந்து விடு தியில் பயன்படுத்தும் வகை யில் வாஷிங் மெஷின் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img