ஸ்ரீவாரு ஹோல்ட்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனம் சென்னையில் தங்களது அதிநவீன தயாரிப்பான பிராணா 2.0 மின்சார இரண்டு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது. பிராணா 2.0.,வின் ஆரம்ப விலை இந்திய ரூபாயில் 2,55,150 ஆகும்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீ வாரு மோட்டார்ஸ் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மோகன்ராஜ் ராமசாமி, பிராணா 2.0 மின்சார இரு சக்கர வாகனத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வெங் கியாட் லியோவ், தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி பெலிக்ஸ், பொறியியல் இயக்குநர் யுவராஜ் சங்கர், இயக்குனர்கள் செல்வராஜ் கிருஷ்ணன் மற்றும் செல்லப்பன் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.