கோவை அரசு கலைக்கல்லூரியில், பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சார்பில் இரண்டு நாள் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இதில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் மிசைல்கள், போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகள், ராணுவ செயற்கைக்கோள், போர்க்கப்பல்கள், பெயிலி பாலம் போன்றவற்றின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.