fbpx
Homeதலையங்கம்தமிழ்நாடு அரசுக்குச் சூட்ட தயாராகும் சாதனை மகுடம்!

தமிழ்நாடு அரசுக்குச் சூட்ட தயாராகும் சாதனை மகுடம்!

மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு, பலரும் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர். ஆனால், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்&-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்&-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருவதாக தெரிகிறது.

இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பெருகிவிட்டதாம். எனினும், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கிறார்கள்.
அதன் பிறகு, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வு பணி முடிந்த பிறகே. விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என்கிறார்கள்.

மற்றொருபக்கம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்பவர்கள் என பலரும், 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர். இதற்கான பட்டியலையும் அரசு தயாரித்து வருகிறது. மற்றொரு பக்கம் வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு அஞ்சல் கணக்குகளை திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே முகாம்களை நடத்தி, அஞ்சல் திட்டத்தை துவக்கி வைத்து வருகிறது.
இந்நிலையில், 1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்த மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பணிகள் வேகமெடுத்து வருகிறது. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கு இன்னும் 2 மாத காலமே உள்ளதால், பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, குடும்ப அட்டைகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த மகளிர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

இந்தத் திட்டத்தை செம்மையாகச் செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த திட்டம் அமல்படுத்தப்படும்போது திமுக அரசின் இன்னொரு மணிமகுடமாகவும், பெருத்த சாதனையாகவும் இது பேசப்படும்.
அதில் என்ன சந்தேகம்?

படிக்க வேண்டும்

spot_img