பாலிடெக்னிக் கல்லூரிகள் இடையேயான தடகள சங்கத்தின் சார்பாக மாநில அளவில் ஆண்களுக்கான கைப்பந்துப் போட்டி ஆர்.வி.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
சேலம் மண்டலத்தின் சார்பில் தியாகராஜர், ஈரோடு மண்டலத்தின் சார்பில் நந்தா, நாகை மண்டலத்தின் சார்பில் ஸ்ரீமகாலெட்சுமி மற்றும் வேலூர் மண்டலத்தின் ஸ்ரீவெங்டேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரிகள் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதிப் பெற்றன. இதில் தியாகராஜர் மற்றும் ஸ்ரீவெங்டேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரிகள் வெளியேற்றப்பட்டு நந்தா மற்றும் ஸ்ரீமகாலெட்சுமி பாலிடெக்னிக் கல்லூரிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதி போட்டியின் முடிவில், நாகை மண்டலத்தின ஸ்ரீமகாலெட்சுமி பாலிடெக்னிக் கல்லூரியினை வீழ்த்தி ஈரோடு மண்டல நந்தா பாலிடெக்னிக் கல்லூரி வெற்றிப் பெற்று சாதனை படைத்தது. இச்சாதனை படைத்த மாணவர்களையும், உடற்கல்வி இயக்குநர் எம் மணிகண்டன் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன், அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்களான எஸ். நந்தகுமார் பிரதீப், எஸ். திருமூர்த்தி, முதல்வர் ஜி. மோகன்குமார் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி பாராட்டு தெரிவித்தனர்.



