fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி

மாவட்ட அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி

ஈரோடு மாவட்ட அளவிலான 5வது கிக்பாக்ஸிங் போட்டி ஞாயிறன்று ஈரோடு ராகவேந்திர திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

ஈரோடு மாவட்ட கிக்பாக்ஸிங் சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.யூசுப் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்டத்தில் இருந்து 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தேர்ச்சி பெற்றவர்கள் மே 7 முதல் 10 ம் தேதி வரை தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ்நாடு அமைச்சூர் கிக்பாக்சிங் போட்டியில் பங்குபெறுவார்கள்.

இந்த போட்டியில் அபிஷேக், கணேசன் மற்றும் சிவாநந்தம் நடுவர்களாக செயல்பட்டனர்.

இதில் சிறப்பு விருந்தினர்கள் டேவிட் மர்கார், பெர்னாடின் மர்கார் பரிசுகள் வழங்கினர்.

சங்க நிர்வாகிகள் ராஜா, செங்கோட்டையன், மகேந்திர குமார், சக்திவேல், சங்கர், பூமிகா மற்றும் மாணவர் ஷேக் முகமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைவர் தென்னரசு ஆகியோர் மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img