கேபிஆர் தொழில்நுட் பக்கல்லூரியில் சர்வதேச அளவிலான குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவியல் கருத்தரங்கு நடை பெற்றது. இது “பன்முகத் துறைகள் இணைந்த குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் தொடர்பியல் தொழில் நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்கள்” எனும் தலைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கோயம்புத்தூரைச் சேர்ந்த கலிபர் இன்டர்கனெக்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தின் செந்தில்குமார் தாமோ தரன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், சிட்னி பல்கலைக் கழகத்தின் சாமுவேல் டென்சிங், கலிபர் இன்டர்கனெக்ட் சொல்யூ ஷன்ஸ் தனியார் நிறுவனம் நிறுவனத்தின் டாக்டர் கல்யாணசுந்தரம் சந்திரன் மற்றும் மலேசியாவின் யுனிவர் சிட்டி டுன் ஹுசைன் ஒன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஃபௌஸியா சே செமான் ஆகியோர் ஆய்வுரைகளை வழங்கினர்.
இந்த கருத்தரங்கு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, விஎல்எஸ்ஐ வடிவமைப்பு, இணையப் பொருட்கள் (ஐஓடி) மற்றும் மேம்பட்ட தொடர்பியல் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளின் ஒருங்கிணைப்பை ஊக்கு விக்கும் நோக் கத்துடன் நடைபெற்றது. இதில் ஆய்வுரைகள், தொழில் நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் வழங்கல், கலந்துரை யாடல் கள் மற்றும் பணிமனைப் பயிற்சிகள் இடம்பெற்றன.



