கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி) மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (HVL) இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் தொடர்பான 4வது சர்வதேச மாநாடு சிஐடி வளாகத்தில் துவங்கியது.
ஜூன் 3 முதல் 5 வரை நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் இந்தியா, நார்வே, இலங்கை, தென் கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று, பொருட்கள் அறிவியல், தூய்மை எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் சுகாதாரத் துறையின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.
மாநாட்டை சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனரல் டாக் டர் என்.கலைச்செல்வி துவக்கி வைத்து, ஆய்வுக் கட்டு ரைகள் தொகுப்பை வெளியிட்டார். கல்வி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை வலியு றுத்தி அவர் பேசினார். நிகழ்ச்சியில் சிஐடி தலைவர் ஆர்.சந்தோஷ், HVL ரெக்டர் பேராசிரியர் குன்னார் யிட்ரி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தயாளன் வேலாயுதப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டின் போது HVL மற்றும் CSIR இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும், தூய்மை எரிசக்தி, மேம்பட்ட பொருட்கள், தொழில்துறை பயன்பாடுகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் புதுமையாளர்களுக்கான ‘இன்னோவேட்டர் ஷோகேஸ்-2026’ நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன.



