தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே பயனாளிகள் ஆலோசனை குழுவின் 160-வது கூட்டம் நேற்று (4ம் தேதி) சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்கள் அங்கூர் சவுகான், டாக்டர் ஐ. செந்தில்குமார், முதன்மைத் திட்ட மேலாளர் (கதி சக்தி) ஷியோ குமார் பிரசாத் மற்றும் சென்னை கோட்டத்தின் மூத்த கிளை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் துவக்கமாக, மூத்த கோட்ட வணிக மேலாளரும், குழுவின் செயலருமான எம்.பரத் குமார் உறுப்பினர் களை வரவேற்றார். பல்வேறு வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகள், பதிவு செய்யப்பட்ட பயணிகள் சங்கங்கள், நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள், தமிழ் நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்ட மைப்பு, தெற்கு ரயில்வே பொது மேலாளரின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் மற்றும் ரயில்வே வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்புப் பிரிவு பிரதிநிதிகள் உள் ளிட்ட மொத்தம் குழுவின் 14உறுப்பினர் கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கோட்ட ரயில்வே மேலாளர் தனது தலைமை உரையில், பயணிகள் வசதிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, செயல்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய துறைகளில் சென்னை கோட்டம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, சென்னை கோட்டத்தின் முக்கிய சாதனைகள், அமிர்த் நிலையத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலைய மறுசீரமைப்புப் பணிகள், வழித்தடத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பயணிகளை மையமாகக் கொண்ட புதிய முயற்சிகள் மற்றும் தற்போதைய உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் குறித்து விரிவான விளக்கக்காட்சி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடை பெற்ற கலந்துரையாடல் அமர்வில், பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் சிறப்பான பயண அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல மதிப்புமிக்க ஆலோசனைகளை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
குறிப்பாக, ரயில் நிலையங்களில் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைத்தல், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் புறநகர் மின்சார ரயில் சேவை களை அறிமுகப்படுத்துதல், விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்குதல், பாது காப்பை பலப்படுத்த சிசிடிவி கேமராக்களை நிறுவுதல், ரயில் கள் மற்றும் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ரயில் நிலையங்களில் பய ணிகள் வசதிகளை விரிவுபடுத்து தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
உறுப்பினர்களின் அனைத்து ஆலோசனைகளும் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த கோட்ட ரயில்வே மேலாளர், பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் சென்னை கோட்டம் எப்போதும் உறுதியுடன் செயல்படும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
சென்னை கோட்டத்தின் மூத்த கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு) நந்தகோபால். ஆர் நன்றி கூறினார்.



