fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போதைப்பொருள் புழக்கம் தடுக்க பேருந்து நிலையங்கள், பார்சல் குடோன்களில் மோப்ப நாய் உதவிடன் போலீசார்...

கோவையில் போதைப்பொருள் புழக்கம் தடுக்க பேருந்து நிலையங்கள், பார்சல் குடோன்களில் மோப்ப நாய் உதவிடன் போலீசார் சோதனை

கோவை மாநகர பேருந்து நிலையங்கள், பார்சல் அலுவலக குடோன் களில் போலீசார் மோப்ப நாய்களுடன் போதை பொருட்கள் தொடர் பாக சோதனை மேற்கொண்டனர்.
போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டு புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

லுவலகத்தில் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக் னேஷ் தலைமையில் போதை யில்லா தமிழகம் போதையில்லா கோவை என்பதை மையமாக கொண்டு அரசு அதிகாரி கள், காவல் துறை அதிகாரி களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை கோவை மாநகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பார்சல் குடோன்களில் போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் போதை பொருட்கள் தடுப்பு குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பேருந்து நிலையங் களில் உள்ள கடைகள் பேருந்தில் பொருட்கள் வைக்கும் இடம் குடோன் களின் உள்ள மூட்டைகள், அட்டைபெட்டிகள் என அனைத்து இடங்களி லும் சோதனை மேற் கொள்ளப்பட்டது இனி வரும் நாட்களிலும் இது போன்று தொடர்ந்து திடீர் ஆய்வுகள் மேற் கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img