இந்தியன் வங்கியின் கோவை சித்தாபுதூர் கிளை, 262, சின்னசாமி நாயுடு சாலை, நியூ சித்தாபுதூர் முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை வங்கியின் கோவை களப் பொது மேலாளர் பி.சுதா ராணி இன்று திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய போது எடுத்த படம். நிகழ்வில் வங்கியின் துணைப் பொது மேலாளரும் கோவை மண்டல மேலாளருமான வெங்கட ரமண ராவ், துணை மண்டல மேலாளர் கே.எம்.அமீருல்லா ஜவஹிர், முதன்மை மேலாளர் பாலாஜி, கிளை மேலாளர் ஜி.பிரதீப் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



