பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26-ம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான மற்றும் பறக்கும் படை கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் மொத் தம் 130 தேர்வு மையங்களில் 365 பள்ளிகளைச் சேர்ந்த 19,344 மாண வர்கள் மற்றும் 16,368 மாணவிகள் என மொத்தம் 35,712 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்கு கூடுதலாக 852 தனித் தேர்வர்களும் பங்கேற்றுள்ள னர். தேர்வின் முதல் நாளான இன்று பல மாணவர்கள் கோவில்களில் வழிபாடு செய்து தேர்வில் சிறப்பாக எழுத வேண்டி பிரார்த்தனை செய்தனர். நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டு உற்சாகத்துடன் தேர்வு மையங் களுக்கு சென்றனர். தேர்வு அமைதியாகவும் முறையாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தேர்வை கண்காணிக்க 130 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 130 அலுவலர்கள், 2,100 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 300 நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் பவன்குமார், வி.கே.கே. மேனன் சாலையில் அமைந்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வை மேற்கொண்டு எவ்வித அச்சமும் இன்றி நிதானமாகவும் கவனத்துடனும் தேர்வு எழுதுமாறு கூறி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



