fbpx
Homeபிற செய்திகள்கேக் வெட்டி பொன் விழா கொண்டாடிய ஸ்டேன்ஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள்

கேக் வெட்டி பொன் விழா கொண்டாடிய ஸ்டேன்ஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோயம்புத்தூர், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 1976ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சமீபத்தில் ஆனைகட்டியில் உள்ள பாப்பிஸ் டஸ்கர் ஹில் ரிசார்ட்டில் தங்கள் பொன்விழா (1976-2026) சந்திப்பைக் கொண்டாடினர்.

இக் கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலியா, பெங்களூரு, பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர்.

இந்த சந்திப்பு நிகழ்வில் சுமார் 24 குடும்பங்களும், 10 தனிநபர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது, பள்ளியின் தாளாளர், தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நான்கு முன்னாள் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.

பொன் விழாவைக் குறிக்கும் வகையில் “50” என்ற வடிவத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் நாவல் மரக்கன்றும் நடப்பட்டது.

முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்திலும், மைதானத்திலும் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

பல்வேறு விளையாட்டுகள் மற்றும் வினாடி-வினா போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மறக்கமுடியாத தருணங்களைப் படம்பிடிக்க செல்ஃபி பூக்கள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு வகுப்புத் தோழருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள் லேமினேட் செய்யப்பட்டுப் பங்கேற்ற வர்களுக்கு வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img