fbpx
Homeபிற செய்திகள்காங்கயம் கல்லூரியில் கலாச்சார விழா

காங்கயம் கல்லூரியில் கலாச்சார விழா

காங்கயம் தொழில்நுட்ப நிறுவனம், காங்கயம் வணிக நிறுவனம் மற்றும் காங்கயம் மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை பிப்ரவரி 13 மற்றும் 14, 2026 ஆகிய தேதிகளில் எலன்ட்ரா &26 என்ற கண்கவர் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே யான கலாச்சார விழாவை நடத்தின. இதில் 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
திரைப்பட நடிகர் அதர்வா, கலைஞர்கள் ஆரி அர்ஜுனா, வி.ஜே.கல்யாணி, எல்.முரளிதரன், பரத் நிவாஸ் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், காங்கயம் கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.ராமலிங்கம்; செயலாளர் சி.கே.வெங்கடாசலம்; தாளாளர் எஸ்.ஆனந்த் வடிவேல்; பொருளாளர் சி.கே.பாலசுப்பிரமணியம்; காங்கயம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.வி.மகேந்திர கவுடா, காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.ராம்குமார், காங்கேயம் வணிகக் கல்லூ ரியின் முதல்வர் டாக்டர் எஸ்.சுரேஷ், காங்கேயம் மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img