fbpx
Homeபிற செய்திகள்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம் கடலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம் கடலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற முன்னெடுப்பாக, கடலூரில் போதை பழக் கத்திற்கு எதிராக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாக னத்தினை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக சமூக விழிப்புணர்வினை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் போதை பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு என்றதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி அரசுத் துறைகளின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத் தப்படுகிறது.

மேலும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட பேரணிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது மது, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் பயன் பாட்டிற்கு எதிராக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் போதை பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் சாலை விபத்து, பொருளாதார சீர்கேடு மற்றும் உடல் உபாதைகள் குறித்து எடுத்துரைக்கும் வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.


இந்த வாகனம் மூலம் மாவட்டம் முழு வதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், உதவி ஆணை யாளர் (கலால்) ராணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img