நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் காப்பீட்டு தளங்களில் ஒன்றான பாலிசிபஜார் நிறுவனம் சார்பில் கோவையில் செய்தியாளர்களுக்கு பாலிசி பஜாரின் ஆயுள் காப்பீட்டின் (தெற்கு) செயல்பாட்டுத் தலைவர் டேவிட் ஆஸ்கார் பேட்டி அளித்தார்.
அப்போது, கோவையில் உள்ள நுகர்வோர் போக்குகள், இளம் ஊதியதாரர்கள் மற்றும் உயர்தர வாடிக்கையாளர்களிடையே காப்பீட்டு தேவை அதிகரிப்பது குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. அவர் தெரிவித்ததாவது:
டேர்ம் காப்பீடு மற்றும் காப்பீட்டுடன் கூடிய முதலீட்டுத் திட்டங்களை ஏற்றுக்கொள்வதில் கோவை ஓர் அற்புதமான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
தென்னிந்தியாவில், குறிப்பாக கோயம்புத்தூர் மக்கள் கல்வியறிவு மற்றும் வளர்ந்து வரும் தேவைக்கு வலுவான சந்தையாக உருவெடுத்துள்ளன. குழந்தைகளின் கல்வி மற்றும் ஓய்வு போன்ற லைஃப்ஸ்டைலுக்கான நிதி திட்டமிடல் குறித்து வாடிக்கையாளர்கள் அதிகளவில் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். ஆக, இந்தப் பகுதியில் பாலிசிபஜாரின் இருப்பு, நுகர்வோர் எதிர்பார்ப்புகளை நேருக்கு நேர் நிவர்த்தி செய்வதிலும், முழுமையாக சேவையாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
ஜனவரி 2022 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில், கோவையில் சேமிப்புத் திட்டங்களுக்கான விசாரணைகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் பரந்த கொங்கு பிராந்தியம் (கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி மற்றும் பொள்ளாச்சி போன்ற நகரங்களை உள்ளடக்கியது) முழுவதும் எடுத்துக் கொண்டால் இதே காலகட்டத்தில் மூன்று மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் டேர்ம் காப்பீடு திட்ட பிழிமி பங்கேற்பும் வளர்ந்துள்ளது, இது வணிகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது.
25-40 வயதுடைய வாடிக்கையாளர்கள் இப்போது டேர்ம் காப்பீடு திட்ட வணிகத்தில் 75% கொண்டுள்ளனர். மேலும் 2022 முதல் சேமிப்புத் திட்ட பங்கேற்பில் தோராயமாக 10% வளர்ச்சியடைந்துள்ளனர். இந்தப் போக்கு, இளைய பணிபுரியும் மக்களிடையே வளர்ந்து வரும் நிதி விழிப்புணர்வை எடுத்துக்காட்டுகிறது.
2023 உடன் ஒப்பிடும்போது 2025 இல் ஓய்வூதியத்தை மையமாகக் கொண்ட தயாரிப்புகளுக்கான விசாரணைகள் இரட்டிப்பாகியுள்ளன.
மாத சம்பளத்தில் பணி புரியும் இளம் ஊதியதாரர்கள் அதிகமாக டேர்ம் காப்பீடு திட்ட வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அதாவது, மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், இது காப்பீட்டுப் பயன்பாட்டில் நிலையான வருமானப் பிரிவுகளின் அதிகரித்து வரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.



