தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஹரிசங்கர் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். ஹரிசங்கரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னிடம் அதிக பணம் இருப்பதாகவும் தான் தங்க கட்டிகள் வாங்கலாம் என்று கருதுகிறேன் உங்களிடம் தங்க கட்டிகள் இருந்தால் தாருங்கள் நான் பணமாக தருகிறேன் என்று ஹரிசங்கரிடம் கூறியுள்ளார்.தொடர்ந்துஹரிசங்கரை 1 கிலோ தங்க கட்டிகளுடன் கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவிற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஹரிசங்கர் 77 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்க கட்டிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு அங்கு காத்திருந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து ஹரிசங்கர் அதற்குண்டான பணத்தை கேட்கவே லட்சுமி மில்ஸ் பகுதிக்கு வாருங்கள் தான் தன்னுடைய வாகனத்தில் பின்னாடி வருவதாக கூறி மாயமகியுள்ளனர்.இந்நிலையில் ஹரிசங்கர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இப்புகாரின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.
இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (53), நவீன் குமார் (25), பிரபு (25) மற்றும் சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 77 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி மூவரை கோவை மத்திய சிறையில் சிறுவனை , சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்



