கோகோ கோலா நிறுவனத்தின் கீழ் உள்ள காபி பிராண்டான கோஸ்டா காபி, இலையுதிர் காலத்தின் சிறந்த ரகசியமான மேப்பிள் ஹேசல் மெனுவை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
இலையுதிர் காலம் தனது பொற்கரங்களால் பூமி யைத் தழுவும் நிலையில், சிவப்பு மற்றும் ஆம்பர் நிறத்தில் இயற்கையை வர்ணிக்கும் வண்ணம்கொண்ட, கோஸ்டா காபி மேப்பிள் ஹேசல் லாட்டே, ஐஸ்கட் லாட்டே மற்றும் ஃப்ராப்பே ஆகிய 3 வித்தியாசமான சுவைகளுடன் ஒரு வசதியான இன்பத்தை வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள காபி பிரியர்களுக்கு உத்வேக மளிக்கும் வகையில், தரம், புதுமை அர்ப்பணிப்பை இந்த அறிமுகம் குறிக்கிறது. மேப்பிள் ஹேசல் லாட்டே ஆனது செறிவான ஹேசல்நட் மற்றும் இனிப்பு மேப்பிள் சிரப் குறிப்புகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மேப்பிள் ஹேசல் ஐஸ்கட் லாட்டே குளிர்ச்சியான, புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்தை வழங்குகிறது.
கோஸ்டாவின் சுவையான ரகசியத்தை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தி, கோஸ்டா காபியின் இந்தியா மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளின் பொது மேலாளர் வினய் நாயர் கூறுகையில், “இந்த இலையுதிர்காலத்தில் எங்கள் மேப்பிள் ஹேசல் மெனு வின் அரவணைப்பையும் அழகையும் இந்தியாவிற்குக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வெளியீடு ஒரு புதிய பருவகால திருப்பத்தைக் கொண்டு வருகிறது” என்றார்.



