fbpx
Homeபிற செய்திகள்அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு: கோவையில் ஆர்வத்துடன் பங்கேற்ற தேர்வர்கள்

அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு: கோவையில் ஆர்வத்துடன் பங்கேற்ற தேர்வர்கள்

தமிழகம் முழுவதும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது.

டி.என்.பி.எஸ்.சி, சார்பில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ-வில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப கடந்த ஜூன் 20ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மொத்தம் 2,327 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 2,763 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவையில் மட்டும் குரூப் 2 தேர்வை 33,490 பேர் எழுதினர்.
தேர்வு மையங்களில் வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்கள் காலை 8.30க்குள் மையங்களுக்குள் வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

மணிக்கூண்டு பகுதி தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட அனைத்து தேர்வு மையத்திகளுக்கும் அதிகாலை முதலே தேர்வர்கள் ஆர்வத்துடன் வந்தனர். அவர்கள் சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்

படிக்க வேண்டும்

spot_img