fbpx
Homeபிற செய்திகள்என்எல்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

என்எல்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில்,மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நடத்தப்படும் ‘விருட்ச ரோபன் அபியான்’ என்ற மரம் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, ராஜஸ்தான், ஒடிஸா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது 42,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், 92,500 மரக்கன்று கள் பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டன.

நெய்வேலி பிரிவில் சுரங்கம் – 1,சுரங்கம் – 1ஏ,சுரங்கம் – 2, அனல் மின் நிலையம் – 2, அனல்மின் நிலையம் – 2 விரிவாக்கம், அனல் மின் நிலையம்-1 விரிவாக்கம், நகரிய நிர்வாகப் பகுதிகள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் குடிருப்புப்பகுதிகள் மற்றும் மற்றுக் குடி யிருப்பு ஆகிய பகுதிகளில் 82,000 மரக்கன்றுகளும், துணை நிறுவனங்களில் 53,000 மரக்கன்றுகளும் நடுவதை இலக்காகக் கொண்டு மரக்கன்றுகள் விநி யோகிக்கப்பட்டன.
என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி சுரங்கம் 1ஏ பகுதியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்று மரக்கன் றுகள் நட்டார். இயக்குநர்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், எம். வெங்கடாசலம், பிரசன்ன குமார் ஆச்சார்யா, கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந் துகொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.

என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி பேசுகையில், இயற்கை சமநிலையை மீட்டெடுக்கும் நோக்கில்,நிலக்கரி அமைச்சகத்தால் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. நெய்வேலி பகுதியில் 3 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்படுவதாகவும், இதனால் காற்று மாசுபாடு குறைக்கப்பட்டு பசுமை மண்டலமாகத் திகழ்வதாக வும் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத், பாரத் கோக்கிங் நிலக்கரி நிறுவ னத்தில் இருந்து நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img