தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வர் கேடயம் வழங்கப்படும். இதற்காக காவல் துறை அதிகாரிகள் அடங்கிய தனிக்குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுவினர் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்வார் கள். மேலும், குற்ற வழக்குகளில் துப்பு துலக்கியது, குற்றவாளிகளைக் கைது செய்தது, தண்டனை பெற்றுத் தந்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தது, பொதுமக்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொண்டது, காவல் நிலையத்தில் சுகாதாரம் – தூய்மையைப் பேணிக்காப்பது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பிடப்படும்.
அதன்படி காவல் துறை அதிகாரிகள் தமிழகம்முழுவதும் சென்று, சிறந்த காவல்நிலையங்களுக்கான தரவரிசைப் பட்டியலை சேகரித்தனர்.
இந்நிலையில் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 2022 ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிக்கண்டன் சென் னையில் உள்ள காவல் துறை இயக்குநரிடம் கேடயத்தை பெற்று கொண்டார்.
தொடர்ந்து கேடயத்துடன் கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.