fbpx
Homeபிற செய்திகள்இருகூர் பேரூராட்சியில் துப்புரவு முகாம்

இருகூர் பேரூராட்சியில் துப்புரவு முகாம்

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடத்தப்பட்டது.

இதையொட்டி, திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்து விழிப்புணர்வு மற்றும் மீண்டும் மஞ்சப்பையை ஊக்குவித்தல் , திடக்க ழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு, பிளாஸ் டிக் பயன்பாட் டினால் ஏற்படும் தீமைகள், பிளாஸ்டிக்கை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்து கண்காட்சி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் நடைபெற்றது.

இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாண விகளுக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.சந்திரன் பரிசு வழங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் அ.கலையரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்

படிக்க வேண்டும்

spot_img