கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி (எஸ்.ஆர்.ஐ.டி.) இயந்திரவியல் துறையின் 3-ம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, இந்திய மோட்டார் விளையாட்டு கழகங்களின் கூட்டமைப்பு வழங்கிய இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் விருதை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற எஃப்.எம்.எஸ்.சி.ஐ. ஆண்டு விருது வழங்கும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. டர்ட் பைக் ராலி போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான திறன், அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான சாதனைகளை
பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகிராஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோர்டி விலடோம்ஸிடம் கதிரொளி சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்.
அவரது வெற்றிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகம், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



