fbpx
Homeதலையங்கம்பாலியல் வன்கொடுமை: சிறுமிகளை பாதுகாப்போம்

பாலியல் வன்கொடுமை: சிறுமிகளை பாதுகாப்போம்

நாடு முழுவதும் ஒரே ஆண்டில் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தெரிவித்த தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

இன்றைக்கு தினசரி பத்திரிகைகளை புரட்டினால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி இல்லாமல் இருக்காது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள்.

வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

அவர்களின் தவறான ஆசைக்கு செல்போன்களின் தாக்கமும் தீனி போடுகிறது.
மனைவி இருக்கும்போதே, பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

என்ன தான் போக்சோ சட்டம் பாய்ந்தாலும் இந்தக் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள்.

தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள்.

பெற்றோர் தங்கள் வளரிளம் மகள்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பெற்ற தாய் தான் மிகவும் கவனமாக கழுகுப் பார்வையோடு இருந்து நல்வழிப்படுத்த வேண்டும்.

பாலியல், காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img