பொறியியல், தொழில் மேலாண் மை, கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய, மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் கேபிஆர் கல்வி நிறுவனங்கள் கேபிஆர் லெகஸி விருதுகள் 2026 என்ற விழாவினை நடத்தியது.

கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் டாக்டர் கே. பி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற லெகஸி விருதுகள் வழங்கும் விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி. கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் வளர்ந்து வரும் கல்வியாளர், புகழ்பெற்ற பேராசிரியர், சிறந்த ஆராய்ச் சியாளர், நட்சத்திர முன்னாள் மாணவர், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட 5 பிரிவுகளில் இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 15 கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அங்கீகரிக்கப் பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும் ரூ 25,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. உயரிய விருதான வாழ் நாள் சாதனையாளர் விருது பெற்றவருக்கு ரூ.50,000 வழங்கப் பட்டது.
அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.ராஜேந்திரன் வெங்கடாச லத்துக்கு, துறைசார் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய மகத்தான மற்றும் நீடித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உயரிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட விண்ணப்பங்களில் இருந்து, பல்வேறு கல்வி மற்றும் தொழில்த் துறைகளைச் சார்ந்த சிறப்பு நடுவர் மன்ற உறுப்பினர்கள் விருதுக்குரியவர்களை மதிப்பீடு செய்து தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



