fbpx
Homeபிற செய்திகள்கிளப் லீக் டென்னிஸ் போட்டி வெற்றியாளர்கள் கவுரவிப்பு

கிளப் லீக் டென்னிஸ் போட்டி வெற்றியாளர்கள் கவுரவிப்பு

கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 2026-ம் ஆண்டுக்கான கிளப்பு களுக்கு இடையேயான லீக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் சிடிடிஏ தலைவர் மற்றும் டென்னிஸ் நிர்வாகி கே.ஜி. ரமேஷ் தலைமை விருந்தினராக பங்கேற்று கோப்பைகள் மற்றும் விருதுகளை வழங்கினார். சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் எம்.சதீஷ் குமார் நாயர் வரவேற்று பேசி னார். போட்டியின் ஏ முதல் கே டிவிஷன் வரை நடை பெற்ற பிரிவுகளில் பல்வேறு அணிகள் கோப்பைகளை வென்றன. சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ‘டாப் ஸ்டார்’ விருதுகளும் வழங்கப்பட்டன.

தேசிய தரவரிசைப் போட்டிகளில் சாதனை படைத்த இளம் வீரர், வீராங்கனைகளும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். முடிவில் சங்க பொரு ளாளர் நரேந்திரா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img