fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதலமைச்சர் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் பிறந்தாளை கொண்டாடினர்.
ஓன்றிய செயலாளர் நித்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் ஜூலியட் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் தமிழக முதல்வருக்கு பிறந்தாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து குழந் தைகளுக்கு இனிப்பு, பென்சில், ஸ்கேல், ரப்பர், சார்ப்னர் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினர். மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு களை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஓன்றிய பொருளாளர் அரவிந்தன், ஓன்றிய துணைச்செயலாளர் சந்துரு, கிளை செயலாளர் அகஸ்டின் லியோ, நவின், கிளை துணைச்செயலாளர் கந்தசாமி, வெங்கட லட்சுமி, ஒன்றிய செயற்குழு பரணி, லட்சுமணன், கிளை பொருளாளர் சபரி விக்னேஷ் உள்பட தமிழக வெற்றிக் கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img