fbpx
Homeதலையங்கம்4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்

4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்

கடந்த செப்டம்பரில் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவையின் பதி விறக்க வேகம் 20.9 எம்பிபிஎஸ் ஆக இருந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

ஜியோவின் 4ஜி நெட்வொர்க் சேவையின் வேகம் இந்த செப்டம்பரில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம் பார்த்தி ஏர்டெல்லின் வேகம் 85 சதவீதம் அதிகரித்து 11.9 எம்பிபிஎஸ் ஆகவும், வோடாபோன் ஐடியாவின் வேகம் 60 சதம் உயர்ந்து 14.4 எம்பிபிஎஸ் ஆகவும் இருந்தன.

பதிவேற்றத்தில் 7.2 எம்பிபிஎஸ் வேகத்துடன் வோடாபோன், ஐடியா முதலிடத்தையும், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்த்தி ஏர்டெல் நிறுவனங்கள் முறையே 6.2 எம்பிபிஎஸ் மற்றும் 4.5 எம்பிபிஎஸ் வேகத்துடன் அடுத்தடுத்த இடங்களையும் பிடித் ததாக டிராய் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img