கோவை கே.ஜி. குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான டிஎன்சிடி நிறுவனத்தின் 31-வது திட்டமான ‘கான்சாஸ் சிட்டி’ குடியிருப்புத் திட்டம், சிங்காநல்லூர் அருகே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 143 வீடுகளைக் கொண்ட இத்திட்டத்தில், ஒரு, இரண்டு, மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகள் மற்றும் தனிவீட்டு வசதியுடன் கூடிய அடுக்குமாடி வீடுகள் இடம்பெற்றுள்ளன.
ஒரு படுக்கையறை வீடு ரூ.39 லட்சம், இரண்டு படுக்கையறை வீடு ரூ.57 லட்சம், மூன்று படுக்கையறை வீடு ரூ.76 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
டிஎன்சிடி இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், இத்திட்டம் அமைதியான சூழலையும் நவீன வசதிகளையும் ஒருங்கிணைப்பதாகத் தெரிவித்தார். பிரீகாஸ்ட் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் உருவாகும் நிறுவனத்தின் எட்டாவது திட்டம் இதுவாகும்.



