Homeபிற செய்திகள்பேவர்ல்ட் நிறுவனத்தின் மெகா திட்டத்தில் பரிசுமழை

பேவர்ல்ட் நிறுவனத்தின் மெகா திட்டத்தில் பரிசுமழை

இந்தியாவின் கிராமப் புற மற்றும் புறநகரங்களில் நிதியுதவி சேவைகளை வழங்கும் முன்னணி நிறு வனமாகிய பேவர்ல்ட், இந்தியாவின் சிறிய அளவிலான சில்லறை விற்பனையாளர்களுக்க £ன மெகா பருவமழை தமாகா திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் உதவியுடன், இந்தியா முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் வலையமைப்பிற்கு கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் போன்ற பம்பர் சலுகைகளை வழங்கும் செயல்முறையை தொடங்கிய முதல் பொருளாதார தொழில்நுட்ப நிறுவனமாக பேவர்ல்ட் நிறுவனம் உருவெடுத்துள்ளது.

ஜூலை 1 முதல் செப்.30,2021 வரை நீடித்த மெகா பருவமழை தமாகா திட்டம் மூலம், பேவர்ல்ட் இந்தியா முழுவதும் பரவியிருக்கும் அதன் விற்பனையாளர்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியது. மூன்று மாதங் களில் அவர்கள் செய்த விற்பனையின் அளவிற்கு இலாபகரமான பரிசுகளை வழங்கியது.

இந்த வெற்றிகரமான நிகழ்வில் 1500க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு, கார்கள், தொலைக்காட் சிப் பெட்டிகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மோட்டார் சைக் கிள்கள் போன்ற 3 கோடி ரூபாய் மதிப்புடைய பரிசுகளை சில்லறை விற்பனையாளர்களுக்கு பேவர்ல்ட் நிறுவனம் வழங்கியது.

இந்த மெகா பருவமழை தமாகா விற்பனையால், பேவர்ல்ட் நிறுவனத்தின் சில்லறை விற்பனையாளர் வளர்ச்சி 20%ல் இருந்து 40% ஆக வளர்ச்சி பெற்றது. இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனையாளர்களின் கனவுகளை ஆதரிக்கும் இத்தகைய திட்டங்களைதொடர பேவர்ல்ட் திட்டமிட்டுள்ளது.

பேவர்ல்ட் பல வகையான பயன்பாட்டு சேவைகளை வழங்குகிறது மற்றும் சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் களையும் வழங்குகிறது. பேவர்ல்ட் நிறுவனம் சுகல் மற்றுடமானி குழும நிறுவனங்களின் ஓர் அங்கமாகும்.

2006-ம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை துவங்கிய பேவர்ல்ட் இந்தியாவில் 630 நகரங்கள் மற்றும் 28 மாநிலங்களில் 600000த்துக்கும் மேற்பட்ட செயலில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களுடன் ஒரு சக்திவாய்ந்த இருப்பை உருவாக்கி, சேவை வழங்கு நர்களுக்கு புதிய சந்தைப் பிரிவுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img