இந்தியாவின் முதல் சிற்பக் கலை சார்ந்த வீட்டு அலங்காரப் பிராண்டாகிய சிலை (SILAII), தனது நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தொடக்க காலம் முதலே முக்கியப் பங்காற்றி வரும் நான்கு ஊழியர்களுக்கு அண்மையில் (அக்.17), சென்னையில் நடைபெற்ற விழாவில், உயர் ரக மாடல் கார்களைப் பரிசாக வழங்கியது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அந்த ஊழியர்கள் அளித்த பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில், இந்நிறுவனத் தின் தலைமை உற்பத்தி அதிகாரி யாகப் பணியாற்றும் ராகுல் கிஷன், சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரான மிதுன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவரான நிஷாந்த், உற்பத்திப் பிரிவின் தலைவரான சத்யா ஆகிய நால்வரும் கௌரவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தங்களது பொறுப் புகளுக்கு அப்பாற்பட்டும் பங்களித்து வந்துள்ளனர்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, ஒவ்வொரு ஊழியரின் குடும்பத்தினரும் தங்களுக்குப் பிடித்த காரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றனர். இதன் மூலம், ஊழியர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் இது ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
சிலை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிறுவனருமாகிய அருண் டைட்டன், ஒரு குடும்ப நிகழ்வில் கலந்துகொண்டபோது இந்த யோசனை உருவானது. அந்நிகழ்வுக்கு, நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருந்தார். அந்தக் காட்சி, சிலை நிறுவனத்தை உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள், தாம் அனுபவிக்கும் அதே வசதியையும், பாதுகாப்பையும் தங்களது குடும்பத்தினருடன் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அருண் டைட்டனிடம் ஏற்படுத்தியது.
இந்த முயற்சி குறித்த தகவல், ஊழியர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது. பின்னர், அவர்கள் இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடிதம் வழங்கப்பட்டது. அந்தக் கடிதங்களில்தான் அவர்களுக்கான கார் பரிசு குறித்த ஆச்சரியமான தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரும் தங்களுக்குப் பிடித்த கார்களைத் தேர்ந்தெடுக்க அழைக்கப்பட்டனர். இவ்வாறு, ஒரு தனிப்பட்ட அறிவிப்பு குடும்பங்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் மகிழ்ச்சியான தருணமாக மாறியது.
இந்த நிகழ்வில் பேசிய சிலை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிறுவனருமாகிய அருண் டைட்டன், “நான் ஒவ்வொரு நாளும் காரில் பாதுகாப்பாக வீடு திரும்புகிறேன். என்னுடன் இணைந்து சிலை நிறுவனத்தை உருவாக்கியவர்களும் தங்களது குடும்பத்தினருடன் அதே வசதியையும், பாதுகாப்பையும் பெற வேண்டும் என்று விரும்பினேன்.
நாங்கள் இணைந்து உருவாக்கிய வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கும், அவர்களுக்கு எங்களது நன்றியை வெளிப்படுத்துவதற்குமான ஒரு முயற்சிதான் இது. இந்தியாவில் கலைத்திறன் மிக்கவர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால், கலைஞர்களும், கைவினைக் கலைஞர்களும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் ஒரு சூழல் அமைப்பு தேவை என்று சிலை நம்புகிறது. தற்போது எங்கள் நிறுவனத்தில் 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். எங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களில் ஏறத்தாழ 80 சதவீதம் பேர் பெண்கள். இவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலருக்கு எங்களது நிறுவனம் முதல் வேலை வாய்ப்பையும், தங்களது கலைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
கலையை அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதோடு, அதன் பின்ன ணியில் உழைக்கும் மக்களுக்குப் பொருள் பொதிந்த வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதே எங்களது நோக்கம். இதனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், மேலும் பல இளைஞர்கள் கலையை மதிப்புமிக்க, நிலையான தொழி லாகத் தேர்ந்தெடுக்க உதவும் கலை சார்ந்த கல்லூரியைத் தொடங்கவும் நாங்கள் விரும்புகிறோம்.
சிலை நிறுவனத்துடன் இணைந்து எங்கள் ஊழியர்களும் வளர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். பணியிடத்தைத் தாண்டி, அவர்களது குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்,” என்றார்.
2019-ஆம் ஆண்டு அருண் டைட்டனால் தொடங்கப்பட்ட சிலை, கலையை அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன் செயல்படும் இந்தியாவின் முதல் சிற்பக் கலை சார்ந்த வீட்டு அலங்காரப் பிராண்டாகும். கைவினைத்திறன், கலாசாரம் மற்றும் கதை சொல்லும் கலையை அடிப்படையாகக் கொண்டு, அறிவுசார் சொத்துரிமைச் சான்றிதழ் பெற்ற, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கைவினைச் சிற்பங்களை இந்நிறுவனம் உருவாக்குகிறது. 5 அங்குலம் முதல் 50 அடி வரையிலான அளவுகளில் உருவாக்கப்படும் இச்சிற்பங்களில், வழிபாட்டுச் சிற்பங்கள், அந்தரத்தில் மிதப்பது போன்ற தோற்றமளிக்கும் சிற்பங்கள், கார் டாஷ்போர்டுக்கான கடவுள் சிலைகள், கோயில் மாதிரிச் சிற்பங்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மார்பளவுச் சிற்பங்கள், திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ நினைவுப் பொருட்கள், நிறுவனங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பரிசுச் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இதுவரை 2,00,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்துள்ள சிலை, 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தயாரிப்புகளைக் கொண்டு சேர்த்துள்ளது. வீட்டு அலங்காரம், தனிப்பயனாக்கப்பட்ட சிற்பங்கள், நிறுவனப் பரிசுப் பொருட்கள் மற்றும் பெரிய அளவிலான பொதுச் சிற்ப நிறுவல்கள் எனப் பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. அரசு நிறுவனங்களுக்காக 50-க் கும் மேற்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டின் 30 அடி உயரச் சிற்பம், இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகும். இது தமிழ்நாடு தலைமைச் செயலகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ளது.
சிலை ஆர்ட்ஸ்கேப் (Silaii Artscape) என்ற புதிய பிராண்டின் வாயிலாக, கலையின் மூலம் நிலப்பரப்புகளையும் சுற்றுச்சூழலையும் வடிவமைக்கும் நோக்கில் சிலை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சென்னை, அடையாறில் தனது முதன்மைச் சிற்ப விற்பனையகத்தையும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு விற்பனை யகத்தையும், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் பிரம்மாண்டமான சிற்ப விற்பனையகத்தையும் சிலை நடத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு: www.silaii.com



