இந்திய விவசாயத்தின் மறு மலர்ச்சிக்காக இந்திய விவசாய குழு ஜப்பான் செல்கிறது. இக்குழுவினர் தமிழக வேளாண் மற்றும் விவசாய நலத் துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்திய ஆர்கானிக் ஃபார்ம்ஸ் அசோசியேஷன் நிறுவனத் தலைவரும், சங்கமாஸ் இன்டர்நேஷனல் தலைவருமான முருகேசன் தலைமையிலும், செயலாளர் ரவிச் சந்திரன் முன்னிலையிலும் 10 FA நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட 27 பேர் கொண்ட இந்திய விவசாய குழுவினர் ஜப்பான் செல்கின்றனர்.
வளம் குன்றாத வேளாண்மை
விவசாய தொழில்நுட்பம், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி இறக்கு மதிகள், வேளாண் கருவிகளை பயன்படுத்துதல் மற்றும் பயிற்சி அளித்தல், விவசாயத்திற்கு தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தும் முறை, வளம் குன்றாத வேளாண்மை நஞ்சு இல்லாத உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறு வடைக்குப்பிந்தைய விளைபொருள் சேதாரத்தை தடுத்தல், நவீன முறை எந்திர மையத்தை இயற்கைக்கு உட்பட்டு பயன்படுத்துவது உள் ளிட்டவற்றை பார்வையிட்டு ஆராய்ச்சிகள் செய்து இந்திய விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்காக இக்குழுவினர் ஜப்பான் செல்கின்றனர்.
இந்த குழுவினர் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



