fbpx
Homeபிற செய்திகள்‘கேர் வித் ஜாய்’ விவோவின் புது பிரச்சாரம்

‘கேர் வித் ஜாய்’ விவோவின் புது பிரச்சாரம்

உலக அளவில் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ மனதைத் தொடும் விதமாக தனது புதிய ‘கேர் வித் ஜாய்’ என்னும் பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ விவோ எப்படி தனது வாடிக்கையாளர்களை கனிவுடன் கவனித்து சேவை செய்கிறது என்பதை விளக்குகிறது.

வாடிக்கையாளர் ஒருவர் தனது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டதாகவும் இதை உடனடியாக பழுதுநீக்கித் தரவேண்டும் என்றும் விவோ சேவை மையத்தில் கூறுகிறார்.

அதற்கு அங்கு இருக்கும் ஊழியர் அதை பழுதுநீக்கி உங்கள் இருப்பிடத்திற்கே வந்து தருகிறோம். உங்களின் முகவரியை கொடுங்கள் என்கிறார். இன்று மாலையே வழங்க முடியுமா என்று கேட்கிறார்.

முடியும் என்று கூறும் ஊழியர், அதை வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று கொடுக்கும்போது அந்த ஸ்மார்ட்போன் வீடியோ காலில் ஊனமுற்ற நிலையில் உள்ள டாக்டர் ஒருவர் அதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

இதைப் பார்த்த விவோ ஊழியர் நெகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறு அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

விவோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் ஆலோசனைப் பிரிவு

விவோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் ஆலோசனைப் பிரிவு தலைவர் யோகேந்திர ஸ்ரீமுலா கூறுகையில், புதிய ‘கேர் வித் ஜாய்’ பிரச்சார வீடியோ நாங்கள் எப்படி வாடிக்கையாளரிடம் அக்கறையுடன் நடந்து கொள்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது.

அனைத்து வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகக்கூடிய மற்றும் முக்கியமான பகுதிகளில் எங்களின் சேவை மையங்கள் உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை வழங்குவதற்காக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் அவர்களுடனான நேரடி சந்திப்பையும் நடத்தி வருகிறோம் என்றார்.

எப்சிபி இந்தியா நிறுவனத்தின் தலைமை படைப்பாற்றல் அதிகாரி சுர்ஜோ தத் கூறுகையில், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டும் விவோவின் முக்கியமான விஷயங்கள் ஆகும்.

இந்த இரண்டையும் வலிமைப்படுத்தும் விதமாக இந்த புதிய பிரச்சாரத்தை விவோவுடன் இணைந்து வெளியிட்டு இருக்கிறோம். இந்த வீடியோ எங்கள் நுகர்வோருக்கு அன்பான, நேர்மையான மற்றும் இதயப்பூர்வமான வாக்குறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img