கோவை குறிச்சி பகுதியில் 20,000 சதுர அடி நிலப்பரப்பில் நமது மண்ணுக்கே உரிய 80 வகைகளைச் சேர்ந்த 7,000க்கும் அதிகமான மரக்கன்றுகள் வளர்க் கப்படவுள்ளன
இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் வேளாண்- தொழில்நுட்ப பெரு நிறுவனங்களுள் ஒன்றான வேகூல் ஃபுட்ஸ், இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற தனது குறிக்கோளை முன்னெடுக்கும் வகையில் இந் நகரில் மிகப்பெரிய மியாவாக்கி நகர்ப்புற வன உருவாக்கத் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது.
மண், தட்பவெப்ப நிலை ஆகியவற்றைச் சார்ந்து சிறப்பாக வளரக்கூடிய உள்நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டு அடர்த் தியான மற்றும் அதிவேகமாக வளரக்கூடிய மரங்கள் அடங்கிய வனப்பகுதியே மியாவாக்கி வனம் என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம் ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து இம்மாநகரின் ஒரு பகுதியான 80 வகை மரக் கன்றுகளை வேகூல் ஃபுட்ஸ் நட்டு உருவாக்கவிருக்கிறது.
7,000க்கும் அதிகமான மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டு அடர்த்தியான வனப்பகுதியாக இந்நிலப்பரப்பு உருவாக்கப்படும். தற்போது, 20,000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பில் இவ் வனம் உருவாக்கப்படுகிறது. பசுமையான நீடிப்புத் திறனுள்ள எதிர்காலத்திற்கான விதைகளை விதைக்கின்ற முயற்சிகளை வலு வாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்துகிறது.
இச்செயல்திட்ட தொடக்க விழாவுக்கு கோவை கோட்டத்தின், மாவட்ட வன அதிகாரி அசோக் குமார் தலைமை வகித்தார். வேகூல் ஃபுட்ஸ்-ன் நீடிப்புத்திறன் பிரிவு தலைவர் ஸ்ரீநிதி ஷி ராவ் பேசுகையில், “சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உமிழ்வுகளை வெளியிடாத நிறுவனமாக ஆக வேண்டும் என்ற வேகூல்-ன் தொலைநோக்கு திட்டமாகும்.
இக்குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாங் கள் துரிதமாக கொண்டிருக்கி« றாம். மரங்களை மீண்டும் நடு வதன் மூலம் காடுவளர்ப்பு நடவ டிக்கைகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்/ மின் உற்பத்தியை பயன்படுத்துவது, மின்சார வாகனங்களை பயன்ப டுத்தும் முறைக்கு மாறுவது, வேளாண் சமூகத்தினர் மத்தியில் மறுஉருவாக்கம் செய்யக்கூடிய வேளாண்மைக்கு ஆதரவாக செயல் படுவது ஆகியவை எமது செயல் முயற்சிகளுள் சிலவாகும்.
கோவை மாநகரில் எங்களது மியாவாக்கி செயல்திட்டத்தின் மீதான பணியை இன்று தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்பிராந்தியத்தில் பசுமைப் போர்வை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை எமது முயற்சிகள் அதிகரிக்கும்; அத்துடன், பருவநிலை நடவடிக்கைக்கான இலக்குகளை நாங்கள் எட்டுவதற்கும் இது உதவும்,” என்று கூறினார்.
சென்னை மாநகரில் 3,000-க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு தனது முதல் மியாவாக்கி வனத்திட்டத்தை வேகூல் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இப்போது தொடங்கப்பட்டுள்ள கோவை குறிச்சி மியாவாக்கி வனம், முழுமையான வளர்ச்சியை இதன் மரங்கள் எட்டியதற்குப் பிறகு வளிமண்டலத்திலிருந்து ஏறக்குறைய 406,000kgCOe (~406 டன்கள்) உமிழ்வுகளை பிளக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
வேகூல் நிறுவனத்தின் இரண்டு சரக்குக்கிடங்கு அமைவிடங்களால் உருவாகக்கூடிய கார்பன் உமிழ்வுகளை சரிசெய்வதற்கு நிகரானதாக இந்நடவடிக்கை இருக்கிறது.



