fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்

கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்

ஈரோடு மாவட்டம் கோபி சரகத்திற்கு உட்பட்ட அந்தியூர் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நியாயவிலைக்கடை பணியா ளர்களுக்கு, மாவட்ட கூட்டுறவுத்துறை, சீமா தொண்டு நிறுவனம், கேர் தொண்டு நிறுவனம், பிவெல் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங் களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கண், பல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோபி சரக துணைப் பதிவாளர் ப.கந்தராஜா, சீமா தொண்டு நிறுவன திட்ட இயக்குநர் எஸ்.புஷ்ப நாதன், கேர் தொண்டு நிறுவன திட்ட இயக்குநர்கள் சார்லஸ் பிரபு, எஸ்.பாக்யராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img