fbpx
Homeபிற செய்திகள்திருச்சுழியில் புதிய கலை அறிவியல் கல்லூரி துவக்கம்- 11 ஆண்டு கால கனவு நனவாகியது: அமைச்சர்...

திருச்சுழியில் புதிய கலை அறிவியல் கல்லூரி துவக்கம்- 11 ஆண்டு கால கனவு நனவாகியது: அமைச்சர் தங்கம் தென்னரசு

புதிய கலை அறிவியல் கல்லூ ரியைத் திறந்து வைத்து, திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் 11 ஆண்டு கால கனவு நனவாகி உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

முதல்வர் 26.08.2021 அன்று உயர் கல்வித் துறையின் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும் மாணவர் சேர்க்கை விகிதாசாரத்தை அதிகப்படுத்துவதற்கும் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம் திருச்சு ழியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதல்வர் காணொ லிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

திருச்சுழி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளா கத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குத்துவிளக்கேற்றி வைத்து, கல்லூரி வகுப்பறைகளை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.

தொழில்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
திருச்சுழி சட்டமன்ற தொகுதி மக்களின் 11 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி உள்ளது.

வாழ்வில் ஓர் திருநாள் என்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றும் முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார். உயர்கல் வியில் இப்பகுதி முன்னேறுவதற்கு இக்கல்லூரி உறுதுணையாக இருக் கும்.

அடுத்தாண்டு இப்பகுதியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வரவுள்ளது என்றார். நிகழ்ச்சியில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப் பாண்டியன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுத்தம்பி, மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இக் கல்லூரியில் 2022-&23ம் கல்வியாண் டில் இளங்கலை (தமிழ்) -50 இடங்களும், இளங்கலை (ஆங்கிலம்) – 50 இடங்களும், இளமறிவியல் (வேதியியல்) – 40 இடங்களும், இளநிலை (வணி கவியல்)- 50 இடங்களும் மற்றும் இளமறிவியல்(கணினி அறிவியல்)- 40 இடங்களும் ஆகிய 5 பாடப்பிரிவுகளில் மொத்தம் 230 இடங்கள் உள்ளன.மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் மா.மணிமாறன், முன்னாள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன் றியக்குழு தலைவர் சுப்பாராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் பெ.ரா.வெற்றிவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் திருச்சுழி பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தொடங்கி வைத்து ஏழை, எளிய மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கிய முதல்வருக்கு, மாவட்டம் நிர்வாகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், மாண வர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img