யூகோ வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 776 சதவீதம் உயர்ந்து ரூ.310 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.35 கோடியாக இருந்தது.
யூகோ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சோம சங்கர பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் யூகோ வங்கியின் நிகர லாபம், முந்தைய இதே காலக்கட்டத்தில் இருந்த ரூ.35.44 கோடியிலிருந்து 776 சதவீதம் அதிகரித்து ரூ.310.4 கோடியாக உயர் துள்ளது.
யூகோ வங்கியின் செயல்பாட்டு லாபம் மூன்றாம் காலாண்டில் ரூ.1340 கோடியாகும். 21.9 சதவீத லாப உயர்வைப் பெற்றுள்ளது.
காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.1763 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு நிகர வட்டி வருமானம் ரூ.1,407 கோடி யாக இருந்தது.
முந்தைய இதே காலத் தில் 9.8 சதவீதமாக இருந்த வங்கியின் என்பிஏ தற்போதைய காலகட்டத் தில் எட்டு சதவீதமாக குறைந்துள்ளது, அதே சமயம் என்பிஏ 3.37 சதவீதத்தில் இருந்து 2.81 சதவீதமாக குறைந்தது.
வங்கியின் ப்ரொவிஷன் கவரேஜ் விகிதம் 91.3 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு இது 91.22 சதவீதமாக இருந்தது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மூலதனப் போதுமான அளவு விகிதம் நிர்ணயிக்கப்பட்ட 11.5 சதவீதத்திற்கு எதிராக 14.5 சதவீதமாக இருந்தது.
வங்கி போதுமான அளவு மூலதனமாக்கப் பட் டுள்ளது. எதிர்காலத்தில் வங்கி வளர்ச்சிக்கு தயா ராக உள்ளது என்பதை அனைத்து செயல்திறன் அளவுகோல்களும் காட்டுகிறது.
சில தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் மீட்பு எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நிதியாண்டில் 10 முதல் 12 சதவீத வளர்ச் சியை வங்கி முன்னெடுத்து வருகிறது.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்திலிருந்ததை விட இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில் வங்கியின் மொத்த வர்த்தகம் 7.86 சதவீத வளர்ச்சியுடன் ரூ.3,44,321 கோடியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



