கோவை மதுக்கரை கணபதி மஹாலில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மதுக்கரை வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ரூபா, பேரூர் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறு வனர் நெல்சன் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு பேரீச்சம் பழங்கள் வழங்கினார்.
விழாவில் கர்ப்பிணி களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கி வாழ்த் தினர். இதில் குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள், அறக்கட்டளை உறுப்பி னர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



