fbpx
Homeபிற செய்திகள்தபால் வாக்குகளுக்கு முழுவதுமாக விலக்கு கோரிய அ.தி.மு.க. வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி

தபால் வாக்குகளுக்கு முழுவதுமாக விலக்கு கோரிய அ.தி.மு.க. வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி

தபால் வாக்குகளுக்கு முழுவதுமாக விலக்கு கோரிய அதிமுக வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு அபராதம் விதிக்கவுள்ளதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றார். அதிமுக சட்ட ஆலோ சனைக்குழு உறுப்பினர் ஆர்.எம்.பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி 138 நகராட்சி 490 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்ட வணையை கடந்த 26ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறி வித்தது.

பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறுவ தாகவும், 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 80,000 காவல்துறை பணியாளர்களையும், 1,30,000 அரசு பணியாளர்களையும் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளதாக மனுதாரர் சுட்டி காட்டி யுள்ளார்.

தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு தபால் வாக்கு உரிமை வழங்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் தேர் தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குகளை தேர்தல் தேதிக்கு முன்பாகவே செலுத்திவிடுவார்கள் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலை பொறுத்தவரையில் மிக கணிசமான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படும் என்பதால் இந்த தேர்தலில் பயன்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கும், காவல்துறை பணியாளர்களுக்கும் பதிலாக ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வசிக்க கூடிய அரசு அலுவலர்களையும், காவல்துறை பணியாளர் களையும் இந்த தேர்தலில் தேர்தல் அலுவலர்களாக பயன்படுத்த வேண் டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறையை பொறுத் தவரையில் தபால்வாக்கு என்ற முறையை முற்றிலு மாக ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட் டுக்கொண்டுள்ளார். தபால் வாக்கு நடைமுறையில் தான் அதிக முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ் வரர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகி யோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்றம் நடத்த முடியாது, யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட முடியாது என அதிமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து, மனு தாரருக்கு அபராதம் விதிக் கவுள்ளதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்ததை அடுத்து நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img