Homeபிற செய்திகள்முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மார்கண்டேயன் எம்எல்ஏ மரியாதை

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மார்கண்டேயன் எம்எல்ஏ மரியாதை

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, எட்டையாபுரம் தெற்கு தெரு, மேலத்தெரு, வடக்குத்தெருவில் உள்ள திருவுருவ சிலைகளுக்கும் படத்திற்கும், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் இளம்புவனத்தில் அமைந்துள்ள அன்னாரது திருஉருவசிலைக்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, சங்கரநாராயணன், எட்டையாபுரம் பேரூர் திமுக செயலாளர் பாரதி கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், வடக்கு மாவட்ட நெச வாளர் அணி துணை அமைப்பாளர் சங்கர நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img