தீபாவளிப் பண்டிகை யை முன்னிட்டு, ஈரோட்டில் செயல்பட்டு வரும் தெய்வத் தாய் மகளிர் சுயஉதவிக் குழுவினர், பாரம்பரிய இனிப்பு, கார வகைகள் உள் ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஈரோடு சூளைப் பகுதியில் இக்குழுவினர் கடந்த ஆறு ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் தலா ரூ.1 லட்சம் கடன் பெற்று, இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இது அவர்களது முக்கிய வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.
இதுகுறித்து குழுவின் தலைவி சத்யப்ரியா கூறியதாவது: கடந்த ஆண்டு தீபாவளியின்போது இனிப்பு, கார வகைகளுக் கான ஆர்டர்களைப் பெற்று தயாரித்து வழங்கினோம். இந்த ஆண்டும் லட்டு, ஜிலேபி, முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான இனிப்பு, கார வகைகளைத் தயாரித்து வருகிறோம். நெய் உள்ளிட்ட தரமான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, வீட்டிலேயே சுகாதாரமான முறையில் இவற்றைத் தயாரிக்கிறோம். சிறுதானியங்களைக் கொண்டும் முறுக்கு, லட்டு உள்ளிட்ட சிற்றுண்டிகளைத் தயாரிக்கிறோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சிறிய அளவி லான ஆர்டர் களையும் ஏற்றுச் செய்கிறோம்.
இதுதவிர, தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, பிரண்டை உள்ளிட்ட சுமார் 20 வகையான தொக்கு வகைகளையும் தயாரித்து விற்பனை செய்கிறோம். கை, கால் மற்றும் உடல் வலியைப் போக்கப் பயன்படுத்தப்படும் மூலிகை எண்ணெயையும் தயாரிக்கிறோம்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் இதேபோன்ற பொருள்களைவிடக் குறைந்த விலையில் எங்களது தயாரிப்புகளை வழங்குகிறோம். கடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் அரங்கம் அமைத்து பொருள்களை விற்பனை செய்தோம். எங்களது உணவுப் பொருள்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (திஷிஷிகிமி) சான்றிதழ் பெற்று மகளிர் திட்டத்தின் கீழ் மதி என்ற பிராண்டிலும் பொருட்களை விற்று வருகிறோம்.



