சதா சதர்க் தமிழ்நாடு பிரிவு முன்னாள் வீரர்கள் சார்பில், 84வது உளவுப் படை தொடக்க நாள் விழா கோவை ஜென்னிஸ் ரெசிடென்சியில் கொண்டாடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் உளவுப் படைப் பாடல் இசைக்கப்பட்டது. 2025&2026 காலகட்டத்தில் மறைந்த முன்னாள் வீரர் களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஓய்வுபெற்ற சுபேதார் மேஜர் மற்றும் கவுரவ கேப்டன் பாலமுருகன், பெண்களுடன் இணைந்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில் ஓய்வுபெற்ற கர்னல் டி.எம்.சண்முகம், உளவுப் படையின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்து பேசினார். தொடர்ந்து ஓய்வுபெற்ற கர்னல் ஹரிஹரன் உரையாற்றினார். முன்னாள் வீரர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பிரிவின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசித்தனர்.



