fbpx
Homeபிற செய்திகள்பார்க் ஓட்டல் குழுமத்தின் ஜோன் கனெக்ட் கோவையில் துவக்கம்

பார்க் ஓட்டல் குழுமத்தின் ஜோன் கனெக்ட் கோவையில் துவக்கம்

கோவை விமான நிலையம் அருகே காளப்பட்டி ரோட்டில், அபி ஜேசுர்ரேந்திர பார்க் ஓட்டல் லிமிடெட் நிறுவனம், ஜோன் கனெக்ட் புதிய ஓட்டலை துவக்கியுள்ளது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, சுகுணா ஆடிட்டோரியம் மற்றும் புகழ்மிக்க கல்வி நிறுவனங்கள் இதன் அரு கிலேயே உள்ளன.

3 வகையான 55 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில், நாள் முழுவதும் உணவருந்த சுற்றுண்டியகம், பார், டவுன்ஹால், பன்கட்ஹால், கபே -சி உள்ளிட்டவை அமைந்துள்ளன. கபே-சியில், புதுமையான சில உணவு வகைகள் உள்ளன.

முறுக்குடன் ஜோன்சுப், பிராண் 65, பாப்கார்ன், புகை பறக்கும் காப்பி குல்பி போன்றவற்றை சு¬ வக்க தவறமாட்டீர்கள்.

துவக்க விழாவில், சிஆர் ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சிசண்முகம் பேசுகையில், எங்களது புதிய இந்த விருந்தோம்பல் மிக்க ஓட்டலுக்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்கிறோம்.

விருந்தோம்பல் மேம்பாட்டிற்கான ஆலோச னைகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

பொதுமேலாளர் மற்றும் தேசிய துறைத் தலைவர் விகாஸ் அலுவாலியா பேசுகையில், அவிநாசி ரோட்டில் ஜோன்பைதி பார்க் ஓட்டலுக்கு பிறகு, ஜோன் கனெக்ட் துவக்கி, கோவையில் நாங்கள் மேம்பட்டுள்ளோம்.

ஜோன் கனெக்ட் மிக வேகமான வளர்ச்சியை கொண்ட உள்நாட்டு ஓட் டல் பிராண்ட். கடந்த மூன்று மாதங்களில் 3 ஓட்டல்களை தொடங் கியுள்ளோம் என்றார்.

சொகுசு ஹோட்டலில் முன்னணியில் உள்ள பார்க் ஹோட்டல்ஸ், இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ளன.

ஜோன்பைதி பார்க், ஒரு சமுதாயத்திற்கு ஏற்ற உயர்ரக ஹோட்டலாகவும், விருந்தினர்களை கவரும் விலையிலும், வடிவமைப்பிலும் கவனம் செலுத்தி அமைக்கப்பட்டவை.

கோவை, ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூரு, ஜோத்பூர், ஜம்மு, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ளன.

ஜோன் கனெக்ட், உற்சாகமும் ஊக்கமும் தரும் வடிவமைப்பை கொண்டது. கோவாவில் தற்சமயம் இயங்கி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img